செய்திகள் மலேசியா
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பொதுமன்னிப்புக்குத் தான் வழிவகுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.
மாறாக, ஒவ்வொரு கைதிக்கும் பொதுமன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காக பொதுமன்னிப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உரிமை உண்டு.
கூட்டரசு அரசாங்க மட்டத்தில் பிரதமர், தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு ஒரு விண்ணப்பத்தை மதிப்பிடும் அதிகாரம் பொதுமன்னிப்பு வாரியத்திற்கு உள்ளது.
இறுதி முடிவு மாமன்னரிடம் உள்ளது என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என்று நான் கூறினேன்.
மாமன்னரின் தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காகத் தனது மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கும் உரிமை கொண்ட டத்தோஸ்ரீ நஜிப் உட்பட, அனைவருக்கும் அந்த உரிமையை நான் இப்போதும் ஆதரிக்கிறேன்.
இது நம்பிக்கை.கூட்டணியின் வேலை என்று கூறும் நமது முன்னாள் நண்பர்களிடமிருந்து மாறுபட்ட குரல்கள் எழுகின்றன.
பிரதமரான நான் கடுமையாகப் பேச விரும்பவில்லை. நான் விமர்சிக்கலாம். ஆனால் அது சரியல்ல.
அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு தெரியும்... நீங்கள் வாக்குகளைப் பெற விரும்பினால், அது ஏமாற்றுவதன் மூலம் அல்ல.
நான் தான் வழி வகுத்தேன் என்று பலர் கூறுகிறார். அது சரியல்ல என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:34 pm
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 8:32 pm
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
