செய்திகள் மலேசியா
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
ஈப்போ:
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை நிலை நாட்ட இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.
பேரா மாநில ஐபிஎப் கட்சியின் 34ஆவது ஆண்டு பேரவை மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி பின் முகமட் இதனை கூறினார்.
நடந்து முடிந்த நெகிரி, ஜெகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்கு இளைஞர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவுக் கூர்ந்தார்.
தேசிய முன்னணி கூட்டணிக்கு 34 ஆண்டுகளாக தொடர்ந்து விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஆதரவளித்து வரும் ஐபிஎப் கட்சியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
ஐபி்எப் கட்சி இடைத்தேர்தல், மாநிலத் தேர்தல், பொதுத்தேர்தல் என பல்வேறு தேர்தல் காலகட்டங்களில் தேசிய முன்னணிக்கு உறுதியான ஆதரவை வழங்கி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஐபிஎப் மிகப் பெரிய நிதி வளங்களைக் கொண்ட அரசியல் கட்சி அல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.
இருந்தபோதிலும், கட்சியின் தலைமைத்துவமும் உறுப்பினர்களும் தங்களால் இயன்ற அளவில் தொடர்ந்து களத்தில் இறங்கி தேசிய தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பணியாற்றி வருகின்றனர்.
இது அவர்களின் உண்மையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது என்றார்.
இதனைப் பாராட்டும் வகையில், ஐபி்எப் பேரா மாநிலத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கும், மாநிலம் முழுவதும் உள்ள பிரிவுகள் மற்றும் கிளைகளின் ஆண்டு கூட்டங்களை முன்னெடுப்பதற்கும், பேராக் தேசிய முன்னணி சார்பில் மாநில ஐபிஎப் கட்சிக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக டத்தோஸ்ரீ சாராணி அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:34 pm
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
