நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்

ஐச்சி:

2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா பதக்கம் வெல்லும் நம்பிக்கை, இன்று நடைபெற்ற 55 கிலோ எடைப் பிரிவு குமிதே போட்டியில் ஆடவர் கராத்தே வீரர் தேவேந்திரன் கல்யான சுந்தரம் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் நிறைவேறியது.

டோயோஹாஷி உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில், நேப்பாளத்தின் பிரதிநிதியான ராகேஷ் மனந்தரை 9-1 என்ற கணக்கில் தோற்கடித்து தேவேந்திரன் ஆதிக்கம் செலுத்தினார்.

யுகோ, ஒரு இப்போன் மூலம் ஆறு புள்ளிகளைப் பெற்று தேவேந்திரன் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம், போட்டிகளில் மலேசியக் குழுவிற்கான முதல் பதக்கத்தை தேவேந்திரன் வழங்கினார்.

மலேசியாவிற்கான எனது முதல் பதக்கம். மிகவும் மகிழ்ச்சி.  இந்த வெற்றி என்னை இன்னும் மகிழ்ச்சியடையச் செய்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset