செய்திகள் மலேசியா
முத்ராவின் 140 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 5,700-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
முத்ராவின் 140 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 5,700-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்காக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக முத்ரா எனும் திட்டத்தை அமைச்சு அறிமுகம் செய்தது.
அமைச்சின் கீழ் இயங்கும் 6 நிறுவனங்களின் கீழ் கிட்டத்தட்ட 220 மில்லியன் ரிங்கிட்டை அமைச்சு ஒதுக்கியது.
இதில் கடந்த ஆகஸ்ட் 31 வரை, முத்ரா நிதியில் மொத்தம் 140 மில்லியன் ரிங்கிட் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் 5,700க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவர்கள் பயனடைந்துள்ளனர்.
தெக்குன் ஸ்பூமி இந்த ஆண்டு இந்திய தொழில்முனைவோருக்காக 120 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இது மற்ற குஸ்கோப்பின் கீழ் செயல்படும் இலாகாக்களின் நிதியை விட மிகப் பெரியதாகும்..
ஆகஸ்ட் 31 நிலவரப்படி, ஸ்பூமி ஏற்கனவே 1930 தொழில்முனைவோருக்கு 64 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது.
மேற்கண்ட புள்ளிவிவரங்களில், ஸ்பூமி நிதியில் 61% (ஏறக்குறைய 40 மில்லியன் ரிங்கிட்) 1400-க்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ஸ்பூமி நிதி பெறுபவர்களில் 72% பேர் முதல் முறையாக நிதி பெறுபவர்கள் ஆவர்.
இப்படி இந்திய தொழில்முனைவர்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்காக அமைச்சு தொடர்ந்து திட்டங்களை அமல்படுத்தும்.
இது வணிகர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று மைக்கியின் தேசிய தொழில் முனைவோர் மாநாட்டை தொடக்கி வைத்த அமைச்சர் ஸ்டீவம் சிம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
கே8 சரக்கு விதிமுறைகள் குறித்து சுங்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
