செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதியுடன் சிறப்பு செயலகம்; நிதிக்காக சமுதாயம் யாரிடமும் கையேந்தக்கூடாது: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதியுடன் சிறப்பு செயலகம் பிரதமர் உருவாக்க வேண்டும்.
குறிப்பாக நிதிக்காக சமுதாயம் யாரிடமும் கையேந்தக்கூடாது மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட்டில்
நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவோருக்கு உதவ 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கபட வேண்டும்.
மேலும் இந்திய சமுதாயம் சம்பந்தப்பட்ட கல்வி, கோயில் போன்ற திட்டங்களுக்கு 500 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மடானி அரசாங்கம் பல வகைகளில் இந்திய சமுதாயத்திற்கு உதவி வருகிறது.
அரசாங்கம் ஒரு செயலகம் தளத்தை அமைத்து அதன் மூலம் உதவிட முன் வர வேண்டும்.
இப்போது கடனுதவி அல்லது உதவிகளை பெற வர்த்தகர்கள் பல அரசு ஏஜன்சிகளை நாட வேண்டியுள்ளது.
இவை அனைத்தும் ஒரே செயலக தளத்தில் அமைத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
தற்போது தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சின் கீழ் இந்திய தொழில் முனைவோருக்கு உதவ ஆறு ஏஜென்சி கீழ் 220 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்யப்பட்டு உதவிகள் கிடைக்கப் பெறுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் லேக் கிளப்பில் மைக்கி ஏற்பாட்டில் முத்ரா எனப்படும் மலேசிய இந்தியர் சிறுதொழில் வர்த்தகர்களுக்கு உதவும் கருத்தரங்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருணன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 350 க்கும் மேற்பட்ட இந்திய வர்த்தகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அதிகாரப்பூர்வமாக இந்த கருத்தரங்கை தொடக்கி வைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
கே8 சரக்கு விதிமுறைகள் குறித்து சுங்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
