நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலம் குண்டர் கும்பல் வழக்கில் 12 பேர் மீது குற்றச்சாட்டு

ஷாஆலம்:

ஷாஆலத்தில் நடந்த இரண்டு கும்பல் மோதல்களில் ஒருவர் உயிரிழந்தது, மற்றொருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, மொத்தம் 12 உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14 முதல் 28 வரை சிலாங்கூர், ஜொ கூரில் உள்ள பல இடங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் விளைவாக 23 முதல் 46 வயதுக்குட்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் ஷசாலி கஹார் கூறினார்.

தாமான் ஆலம் மெகாவில் நடந்த மரண வழக்கில், மொத்தமுள்ள எட்டு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302, பிரிவு 149-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்ரீ மூடாவில் நடந்த காய வழக்கில் மற்ற நான்கு பேர் மீது பிரிவு 148-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அதே சமயம், போதிய ஆதாரங்கள் தொடர்புடைய சான்றுகள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்களும் உள்ளனர் என்று சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset