நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹாடி அவாங் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படும்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

கடந்த 2014-ல் தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக, பாஸ் கட்சிக்கு அமெரிக்கா ஒருமுறை ஒத்துழைப்பு வழங்க முன்வந்தது என்ற அவரின் கூற்று தொடர்பாக, காவல்துறை அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்.

விசாரணையை நிறைவு செய்வதற்காக, ஹாடி விரைவில் அழைக்கப்படுவார்.

இதுவரை, இந்தக் கூற்று தொடர்பாக 12 புகார்கள் வந்துள்ளதாகவும், 12 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு, பொது இடையூறை ஏற்படுத்தக்கூடிய அறிக்கையை வெளியிட்ட குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(பி)-இன் கீழும், அத்துடன் பிணைய வசதிகள் அல்லது பிணைய சேவைகளை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றத்திற்காக 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-இன் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

எனவே, விசாரணையில் தலையிடக்கூடிய எந்தவொரு யூகத்தையும் பொதுமக்கள் கூற வேண்டாம் என்று டத்தோ குமார் அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset