நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான இயந்திர கோளாறு காரணமாக மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறக்கம்: 186 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: 

இயந்திர கோளாறு காரணமாக மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்னையில் அவசரமாக தரையிறங்கியது 

சம்பந்தப்பட்ட விமானம் கோலாலம்பூரிலிருந்து ஜெட்டா நோக்கிய பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது 

186 பயணிகளுடன் பயணித்த MH156 விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர நிலையைப் பதிவு செய்து பத்திரமாகத் தரையிறங்கியது.

அதன் பின்னர் விமானம் நிறுத்துமிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.

"விமானத்தின் இரண்டாவது எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமான நிறுவனம் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் குழுவினர் இது குறித்து மேலும் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று சென்னை விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset