நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இந்திய தொழிலாளர் துன்புறுத்தப்பட்டாரா?; அண்ணனுடனான பிரச்சினையால் தவறான தகவல்களை பரப்பி விட்டேன்: ஹருண் விளக்கம்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் கனி ஹருண் பாட்சா என்பவர் அண்ணனுடனான பிரச்சினையால் தவறான தகவல்களை பரப்பி விட்டேன்.

சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளருக்கும் இப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை  என  விளக்கமளித்துள்ளார்.


ஜொகூர் மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நான் துன்புறுத்தப்படுகிறேன்.

உணவக உரிமையாளர் என்னை அடிக்கிறார். சம்பளம் கொடுப்பது இல்லை.

ஆகையால் தமிழக முதல்வர் விஜய் தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று ஹருண் என்ற இந்திய தொழிலாளர் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஹருண் ஜொகூர் ஸ்ரீ ஆலம் போலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை செய்துள்ளார்.

அதில் வேலைக்கு நான் தாமதமாக வந்தேன். மேலும் என் அண்ணன் சட்னி செய்ய சொன்னார். அப்போது எனக்கும் அவருக்கும் பிரச்சனையாகியது.

இதனால் அவர் என்னை அடித்து விட்டார். உடனே அங்குள்ள ஒரு அறையில் அமர்ந்து அழுது கொண்டே வீடியோவை பதிவு செய்தேன்.

அண்ணனை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தேன். ஆனால் அந்த வீடியோ எனக்கு தெரியாமல் வைரல் ஆகிவிட்டது.

எனக்கும் என் அண்ணனுக்கும் இடையிலான பிரச்சினையே இதற்கு காரணம்.

உணவக உரிமையாளருக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உரிமையாளர் எனக்கு முறையாக சம்பளம் வழங்குகிறார்.

அந்த தவறான தகவலை பரப்பியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ஹருண் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset