நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலா சிலாங்கூர் ஆற்றில் குதித்த உள்நாட்டு ஆடவர்: தீயணைப்பு படைவீரர் விரைவான நடவடிக்கையினால் உயிர் தப்பினார் 

கோலா சிலாங்கூர்: 

கோலா சிலாங்கூரில் உள்ள சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஸிஸ் ஷா பாலத்திலிருந்து குதித்த 44 வயதுடைய உள்ளூர் ஆடவரைத் தீயணைப்பு மீட்புப்படை வீரர் ஒருவர் விரைவாக செயல்பட்டு காப்பாற்றினார். 

நேற்று இரவு இச்சம்பவம் குறித்து இரவு 8.05 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அஸ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கோலா சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்

ஒரு தீயணைப்பு வீரர் ஆற்றுக்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரம் நீந்திச் சென்று, இரவு 9.15 மணியளவில் அந்த நபரைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுவந்தார்.

உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இன்றி மீட்கப்பட்ட அந்த நபர், மேல் நடவடிக்கை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினரிடமும் காவல்துறையினரிடமும் ஒப்படைக்கப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset