நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த மாத இறுதிக்குள் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படலாம்: முதலமைச்சர் சூசகம்

மலாக்கா:

இந்த மாத இறுதிக்குள் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளது என முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோ சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்குள் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதிக காலம் ஆகாது (அது கலைக்கப்படும்). அன்று நான் இன்னும் நான்கு வெள்ளிக்கிழமைகள் இருக்கும் என்று சொன்னேன்.

ஆனால் இப்போது இரண்டு வெள்ளிக்கிழமைகள் மட்டுமே மீதமுள்ளன என்று அவர் கூறியுள்ளார். 

நேற்று, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது குறித்த அறிவிப்பை விரைவுபடுத்துமாறு ரவுஃபை தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ  ஜாஹித் ஹமிடி வலியுறுத்தினார்.

மாநிலத்தின் திசையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்க மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால், இந்த அறிவிப்பை அதிக காலம் தாமதப்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset