நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா வெறும் பயனீட்டாளர்களாக மட்டும் இல்லாமல், தனக்கென சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்: பிரதமர்

புத்ராஜெயா:

மலேசியா தனது அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிடும் வேளையில், தொழில்நுட்பத்தின் நுகர்வோர் என்ற தனது நிலையைத் தாண்டி, அதனை உருவாக்கும், சொந்தமாக்கிக் கொள்ளும், அதில் தேர்ச்சி பெறும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

உணவு, எரிசக்திப் பாதுகாப்பு முதல் பொது சுகாதாரம், நீர்வளம், பருவநிலை மாற்றம் வரையிலான பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் தொழில்நுட்பத் திறன்கள் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்று வருவதால், மலேசியா ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

மற்றவர்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் பயனீட்டாளர்களாக நாம் என்றென்றும் இருக்க முடியாது.

ஷாஆலமில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் இன்று நடைபெற்ற என்எஸ்சி  2026 பிரதமர் கிண்ண  இறுதிப் போட்டிகளின் ஒரு பகுதியாகப் பேசியபோது, ​​

நாம் தொழில்நுட்பத்தை உருவாக்கும், சொந்தமாக்கிக்கொள்ளும் மற்றும் அதில் தேர்ச்சி பெறும் ஒரு நாடாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் இந்த உரையின் எழுத்து வடிவத்தை அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்துறை அமைச்சர் சாங் லி காங் வாசித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset