செய்திகள் மலேசியா
புகைமூட்டம் காரணமாக பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோர்களுக்கு அனுமதி: ஃபட்லினா
புத்ராஜெயா:
தற்போதைய புகைமூட்டச் சூழல் காரணமாக தங்கள் பிள்ளைகளின் உடல்நலம் குறித்துக் கவலை கொண்டால், பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய நடவடிக்கையை எடுக்கும் பட்சத்தில், பெற்றோர்கள் பள்ளிக்குத் தெரிவித்தால் மட்டும் போதும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
தற்போதைய புகைமூட்டச் சூழல் குறித்த பெற்றோர்களின் கவலைகளை நான் புரிந்துகொள்கிறேன். பெற்றோர்களின் கவலைகளை நாங்கள் செவிமடுக்கிறோம்.
நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குழந்தைகளின் உடல்நலம், பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறையால் வெளியிடப்படும் காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) அளவுகளையும், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் தற்போதைய சூழலையும் அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
தேசிய புகைமூட்டச் செயல் திட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
ஏபிஐ அளவு 100-ஐத் தாண்டும்போது, வகுப்பறைக்கு வெளியே உள்ள அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். ஏபிஐ அளவு 200-ஐத் தாண்டும்போது, பள்ளிகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 1:57 pm
மலேசியா வெறும் பயனீட்டாளர்களாக மட்டும் இல்லாமல், தனக்கென சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்: பிரதமர்
September 7, 2026, 1:56 pm
பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
September 7, 2026, 1:54 pm
பண்டார் துன் ரசாக் தொகுதியில் Komuniti Madani சான்றிதழ் 60 பேருக்கு வழங்கப்பட்டது
September 7, 2026, 1:22 pm
11 ஆண்டுக்கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது: புதிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டப்படுகிறது: ஃபட்லினா
September 7, 2026, 1:21 pm
அம்பாங்கில் முதல் முறையாக மாபெரும் தீபாவளி திருவிழா; உள்ளூர் வணிகர்களுக்கே முன்னுரிமை: ரவின்
September 7, 2026, 11:34 am
நம்பிக்கை கூட்டணி அழைக்கப்படவில்லை; பாஸ் அழைக்கப்பட்டது: ஜாஹித்
September 7, 2026, 11:02 am
