செய்திகள் மலேசியா
பண்டார் துன் ரசாக் தொகுதியில் Komuniti Madani சான்றிதழ் 60 பேருக்கு வழங்கப்பட்டது
கோலாலம்பூர்:
நாட்டிலேயே முதல் முறையாக பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் 60 பேருக்கு கமுனிட்டி மடானி சான்றிதழ் வழங்கப்பட்டது.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தலைவர் டத்தோ அஸ்மான் கலந்து சிறப்பித்தார்.
பண்டார் துன் ரசாக் கெஅடிலான் உதவி தலைவர், தொகுதியின் கெமுனிட்டி மடானி தலைவர் ஜோனதன் வேலா சிறப்புரையாற்றினார்.
பின்னர் 60 பேருக்கு கமுனிட்டி மடானி சான்றிதழை டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வழங்கினார்.
சமூக தலைவர்களை போல் இந்த 60 பேரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவார்கள்.
அதன் மூலம் மக்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினைகளை தீர்வு காண உதவும் என்று ஜோனதன் வேலா நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் கமுனிட்டி மடானியாக 60 பேர் நியமனம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 1:57 pm
மலேசியா வெறும் பயனீட்டாளர்களாக மட்டும் இல்லாமல், தனக்கென சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்: பிரதமர்
September 7, 2026, 1:56 pm
பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
September 7, 2026, 1:55 pm
புகைமூட்டம் காரணமாக பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோர்களுக்கு அனுமதி: ஃபட்லினா
September 7, 2026, 1:22 pm
11 ஆண்டுக்கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது: புதிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டப்படுகிறது: ஃபட்லினா
September 7, 2026, 1:21 pm
அம்பாங்கில் முதல் முறையாக மாபெரும் தீபாவளி திருவிழா; உள்ளூர் வணிகர்களுக்கே முன்னுரிமை: ரவின்
September 7, 2026, 11:34 am
நம்பிக்கை கூட்டணி அழைக்கப்படவில்லை; பாஸ் அழைக்கப்பட்டது: ஜாஹித்
September 7, 2026, 11:02 am
