செய்திகள் மலேசியா
அம்பாங்கில் முதல் முறையாக மாபெரும் தீபாவளி திருவிழா; உள்ளூர் வணிகர்களுக்கே முன்னுரிமை: ரவின்
அம்பாங்:
அம்பாங்கில் முதல் முறையாக மாபெரும் தீபாவளி திருவிழாவிற்கு உள்ளூர் வணிகர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
அம்பாங் இந்திய சமூக நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் எம்ஏ ரவின் இதனை கூறினார்.
தீபாவளி பெருநாள் நெருங்கி கொண்டிருக்கும் பட்சத்தில் ஆங்கங்கே தீபாவளி சந்தைகள் ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால் முதல் முறையாக அம்பாங் வட்டாரத்தில் இந்த தீபாவளி சந்தை நடத்தப்படவுள்ளது.
வரும் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி தீபாவளி முதல் நாள் இரவு வரை காலை 10 முதல் இரவு 10 மணி வரை அம்பாங் டேவான் டத்தோ அஹ்மத் ரசாலியில் நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 40 வணிக கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளது. அனைத்து விதமான வணிக தளங்கலும் இங்கு அமைக்கப்படவுள்ளது.
ஆக அம்பாங் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களும் வணிகர்களும் இந்த தீபாவளி திருவிழாவிற்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று ரவின் கேட்டுக் கொண்டார்.
தீபாவளி சந்தை என்றாலே அந்நிய நாட்டு வியாபாரிகளின் விவகாரம் வந்து விடும்.
என்னை பொருத்தவரையில் அம்பாங் தீபாவளி சந்தையில் உள்நாட்டினருக்கு தான் முன்னுரிமை.
ஆனால் உள்ளூர் வணிகர்கள் வரவில்லை என்றால் நான் என்ன செய்வது. அந்நிய நாட்டு வியபாரிகளுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆகவே உள்ளூர் வணிகர்கள் இந்த தீபாவளி சந்தையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு 0163962166
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 1:57 pm
மலேசியா வெறும் பயனீட்டாளர்களாக மட்டும் இல்லாமல், தனக்கென சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்: பிரதமர்
September 7, 2026, 1:56 pm
பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
September 7, 2026, 1:55 pm
புகைமூட்டம் காரணமாக பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோர்களுக்கு அனுமதி: ஃபட்லினா
September 7, 2026, 1:54 pm
பண்டார் துன் ரசாக் தொகுதியில் Komuniti Madani சான்றிதழ் 60 பேருக்கு வழங்கப்பட்டது
September 7, 2026, 1:22 pm
11 ஆண்டுக்கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது: புதிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டப்படுகிறது: ஃபட்லினா
September 7, 2026, 11:34 am
நம்பிக்கை கூட்டணி அழைக்கப்படவில்லை; பாஸ் அழைக்கப்பட்டது: ஜாஹித்
September 7, 2026, 11:02 am
