செய்திகள் மலேசியா
ஈப்போ புந்தோங்கில் கட்டுப்பாட்டை இழந்த லோரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது: தாயும், மகனும் உயிர் தப்பினர்
ஈப்போ:
புந்தோங் ஜாலான் சுங்கை பாரியில் லோரி ஒன்று கட்டுபாட்டை இழந்து வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.
அதே நேரத்தில் லோரியின் முன்பகுதியும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருக்கும் தனித்து வாழும் தாயான விரோனிகா ராஜரத்தினம் ( வயது 47), அவரது 14 வயதுடைய மகனும் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து இன்று போலிஸ் பகார் செய்யப்படும் செய்தியாளர்களிடம் விரோனிகா தெரிவித்தார்
அதிகாலை ஐந்து மணியளவில் மகனை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்துக் கொண்டிருந்தேன்.
அப்போது வீட்டின் முன் புறம் பெரிய இடி விழுந்தது போல சத்தம் கேட்டது.
உடனே வீட்டு முன் வாசல் கதவை திறந்து பார்த்த போது முன் புறம் லோரி ஒன்று மின் கம்பத்தை மீது பின்னர் வீட்டு முன் புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மோதி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த்தாக அவர் கூறினார்.
வீட்டு வரவேற்பறையில் தனது உறங்குவது வழக்கம். அந்த லோரி வீட்டில் நுழைந்திருந்தால் மகன் பாதிக்கபட்டிருப்பான் என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
தகவல் அறிந்தவுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த புந்தோங் சிறார் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் சமுக ஆர்வளருமான பெ. யுவராஜ் தாயும் மகனும் தெய்வாதினமாக உயிர் தப்பியதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 1:57 pm
மலேசியா வெறும் பயனீட்டாளர்களாக மட்டும் இல்லாமல், தனக்கென சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்: பிரதமர்
September 7, 2026, 1:56 pm
பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
September 7, 2026, 1:55 pm
புகைமூட்டம் காரணமாக பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோர்களுக்கு அனுமதி: ஃபட்லினா
September 7, 2026, 1:54 pm
பண்டார் துன் ரசாக் தொகுதியில் Komuniti Madani சான்றிதழ் 60 பேருக்கு வழங்கப்பட்டது
September 7, 2026, 1:22 pm
11 ஆண்டுக்கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது: புதிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டப்படுகிறது: ஃபட்லினா
September 7, 2026, 1:21 pm
அம்பாங்கில் முதல் முறையாக மாபெரும் தீபாவளி திருவிழா; உள்ளூர் வணிகர்களுக்கே முன்னுரிமை: ரவின்
September 7, 2026, 11:34 am
நம்பிக்கை கூட்டணி அழைக்கப்படவில்லை; பாஸ் அழைக்கப்பட்டது: ஜாஹித்
September 7, 2026, 11:02 am
