நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்

புத்ராஜெயா:

திட்ட மோசடி, நில விற்பனை வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் செப்டம்பர் 11 வரை ஐந்து நாட்களுக்கு நீதிமன்ற தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்ராஜெயா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செய்த மனுவின் பேரில், நீதித்துறை நடுவர் எரீன் ஜகாரியா இந்த நீதிமன்றக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

டத்தோ என்ற பட்டம் பெற்ற, 60 வயதுகளில் உள்ள அந்த நபர், கைகளில் கைவிலங்கு இல்லாமல், பச்சை நிற காலர் சட்டை அணிந்து எம்ஏசிசி வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.

இதற்கிடையில், உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு நபருக்கான நீதிமன்றக் காவல் மனு மருத்துவமனையில் பரிசீலிக்கப்படும்.

புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் நேற்று வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் எம்ஏசிசியால் தடுத்து வைக்கப்பட்டனர்.

தாபோங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பெல்டா விவகாரத்தை அரசாங்கம் விசாரிக்கும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்தக் கைதுகள் நிகழ்ந்துள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset