செய்திகள் உலகம்
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
பேங்காக்:
60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் தங்கும் காலத்தை குறைத்து விதிமுறைகளில் அந்நாட்டு அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
தாய்லாந்து நாட்டுக்கு ஓராண்டுக்கு சுமார் 3 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். அதிகபட்சமாக மலேசியா, சிங்கப்பூர், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலானோர் சுற்றுலாச் செல்கிறார்கள்.
அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் 60 நாள்கள் வரை தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விசா இல்லாமல் தங்கும் காலத்தை 60 நாள்களிலிருந்து 30 நாள்களாக குறைத்து விதிமுறைகளில் தாய்லாந்து அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை வருகின்ற செப்டம்பர் 15 முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, ஜப்பான் உள்பட 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி 30 நாள்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்கிக் கொள்ள முடியும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
