செய்திகள் உலகம்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
பெர்லின்:
ஜெர்மனியில் வீசிய கடும் வெப்ப அலை காரணமாக 16,300 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே ஐரோப்பா முழுவதும் நிலவும் இந்த தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சிக்கு முக்கிய காரணம் என அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வாரம் ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்ட 15,800 உயிரிழப்புகள் என்ற புள்ளிவிவரம், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 23 வரையிலான கூடுதல் ஒரு வார காலத் தரவுகளின் அடிப்படையில் தற்போது 16,300 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்த அடுத்தடுத்த வெப்ப அலைகளால் 30,000-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ஜெர்மன் பொது சுகாதார அதிகார அமைப்பின் கூற்றுப்படி, வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளில் அதிகப்படியானவை 75 வயதிற்கு மேற்பட்ட முதியோர் பிரிவிலேயே நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் 9,600 உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ளப் பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 4, 2026, 10:32 am
நேப்பாள வெள்ளப் பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
August 30, 2026, 10:07 am
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
August 29, 2026, 4:48 pm
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: கிட்டத்தட்ட 3000 பேர் வரை காணவில்லை
August 29, 2026, 10:55 am
