செய்திகள் மலேசியா
நித்திரைக் கதைகள் நூல் தொகுப்பை அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கு இலவசமாக கொண்டு சேர்ப்பதே பெர்தாமாவின் முதன்மை இலக்காகும்: பார்த்திபன்
புத்ராஜெயா:
நித்திரைக் கதைகள் நூல் தொகுப்பை அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கு இலவசமாக கொண்டு சேர்ப்பதே பெர்தாமாவின் முதன்மை இலக்காகும்.
கோலாலம்பூர், கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (பெர்தாமா) தலைவர் பார்த்திபன் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தமிழ் சமுதாயத்தின் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நித்திரைக் கதைகள் புத்தகம் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி கோலாலம்பூர் தேசிய நூலகம் ஆடிட்டோரியத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆதரவில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நித்திரைக் கதைகள் புத்தகத்தில் மொத்தம் 61 கதைகள் இடம் பெற்றுள்ளன.
ஒரு புத்தகத்தில் ஆறு கதைகள் என்ற வீதத்தில் 10 புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நித்திரைக் கதைகள் நூல் வெளியீட்டு விழாவின் முக்கிய நோக்கம் சிறுவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தமிழ் மொழி - இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் பற்றையும் அதிகரிப்பதாகும் என்று அவர் சொன்னார்.
இதன் மூலம் புதிய தலைமுறையினர் வாசிக்கும் பழக்கத்தில் தொடர்ந்து ஆர்வம் செலுத்துவார்கள்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வை வெற்றி பெற செய்ய ஆதரவு வழங்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக 017-6834685, 012-3113343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
