நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது 

கூலிம்: 

கடந்த வாரம் கூலிமில்  தனது மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் அப்பெண்ணின் கணவர் மீது இன்று கூலிம் மாஜிஸ்டிரெட்  நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது 

குற்றஞ்சாட்டப்பட்ட ஜி. விக்னேஸ்வரன், நீதிமன்றத்தில் மொழிப்பெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்தபோது அதனைப் புரிந்து கொண்டதாக தலையசைத்தார் 

கொலை குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடமிருந்து நீதிமன்றம் எந்தவொரு வாக்குமூலமும் பெறவில்லை

இந்த நபர் மீது குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302 கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இக்குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

முன்னதாக, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி கூலிமில் உள்ள ஒரு வீட்டில் எஸ். ஷீலா எனும் தனது மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார் அவரின் கணவர் ஜி.விக்னேஸ்வரன். 

இந்தத் தம்பதியரின் சொந்த இல்லத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் எஸ். பிரீயா, குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பிரதிவாதிக்கு எந்தவிதமான ஜாமீனும் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

உடற்கூறாய்வு மற்றும் வேதியியல் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதற்காக இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset