செய்திகள் மலேசியா
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
கோலாலம்பூர்:
பெய்ஜிங்கில் நடைபெறும் 12ஆவது ஏபெக் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் திட்டமிட்டபடி சீனாவில் தனது உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தொடர்வார்.
இந்த நிகழ்ச்சிகளில் பல இருதரப்பு சந்திப்புகளும், மலேசியா மற்றும் சீனா இடையேயான போக்குவரத்து ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதலும் அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் தனது உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, அமைச்சர் ஷாங்காய்க்குச் சென்று பிரதமரின் குழுவில் இணைவார்.
பின்னர், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து தனது ராஜினாமா செயல்முறை தொடர்பான விஷயங்களைக் கையாளுவதற்காக மலேசியா திரும்புவார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் அனைத்து விவகாரங்களும் பொறுப்புகளும் வழக்கம் போல் தொழில்முறையாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து உறுதி செய்வோம் என்று அமைச்சு கூறியது.
ஏபெக் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜசெக பொதுச் செயலாளராகவும் இருக்கும் லோக், சனிக்கிழமையன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனத்தை துவாங்கு முஹ்ரிஸ் உடனடியாக ரத்து செய்தார்
September 20, 2026, 8:36 pm
