செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வழக்கம் போல் தங்களின் பணியை மேற்கொள்வார்கள்: மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் திட்டவட்டம்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நியமனங்கள் திடீரென்று இரத்து செய்யப்பட்டுள்ளது
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரின் செயல் என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டது
மந்திரி பெசார் என்ற முறையில் தன்னிடம் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும் என்று மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் தெரிவித்தார்
நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பின் விதி 38இன் கீழ் மாநில ஆட்சியாளர் நடந்து கொள்ளவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் ஆட்சியாளரின் இந்த செயல் சட்டப்பூர்வமானது இல்லை என்றும் நியமிக்கப்பட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களின் பணியைத் தொடர்வார்கள் என்று அவர் சொன்னார்
முன்னதாக, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நியமனத்தையும் ரத்து செய்வதாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் அதிரடி உத்தரவை வெளியிட்டிருந்தார்
சத்தியத்தை மீறியதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நெகிரி செம்பிலான் அரண்மனை பெங்கெலோலா பிஜாயா அஸிஸி முஹம்மத் அலி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
