செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர்:
இன்று காலை 9 மணி நிலவரப்படி நாட்டிலுள்ள 17 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டது
மலேசிய வளிமண்டல மாசு மேலாண்மை அமைப்பான APIMS இந்த தகவலை வெளியிட்டுள்ளது
சரவாக் மாநிலத்தின் காபிட் மற்றும் செரியான் பகுதிகளில் காற்றின் தரம் 167ஆக பதிவு செய்யப்பட்டன.
மேலும், ஸ்ரீ அமான் (161), பிந்துலு (159) ஆகிய பகுதிகளிலும் காற்று மாசு மோசமான நிலையைக் கண்டுள்ளது.
நாட்டின் நிர்வாக மையமான புத்ராஜெயாவில் காற்றின் தரம் 157ஆக பதிவு செய்யப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் ஆகிய பகுதிகள் 157ஆக பதிவு செய்துள்ளன. அதனைத் தொடர்ந்து, சிரம்பான் 154 ஆகவும், சபா கோத்தா கினாபாலு பாலிடெக்னிக் 153ஆகவும் காற்றின் தரம் எட்டியுள்ளன.
இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 41 இடங்களில் காற்றுத் தரம் மிதமான நிலையைக் கொண்டுள்ளது. மேலும், ஆறு இடங்களில் மட்டுமே காற்றுத் தரம் நல்ல நிலையில் இருப்பதாகப் பதிவாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 9:27 am
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனத்தை துவாங்கு முஹ்ரிஸ் உடனடியாக ரத்து செய்தார்
September 20, 2026, 8:36 pm
