செய்திகள் மலேசியா
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
ஜொகூர் பாரு:
ஜொகூர் பாருவில் உள்ள ஈஸ்டர்ன் டிஸ்பெர்சல் லிங்க் (EDL) நெடுஞ்சாலையின் பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படும் புகாரில் மூன்று நபர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வைரலாகப் பரவியதை அடுத்து காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஜொகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் எங் ஸ்வீ சய்ட் இந்தச் கைது நடவடிக்கையை ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த மூன்று சந்தேக நபர்களின் வயது 28 முதல் 36 வரை இருக்கும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் MPV ரக காரும் போலிசார் பறிமுதல் செய்தனர்
கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி மற்றும் முந்தைய குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் ஒழுக்கத்திற்கு எதிராகவும், ஆபாசமான முறையிலும் நடந்துகொண்டதாக வகைப்படுத்தப்படும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 377D இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனத்தை துவாங்கு முஹ்ரிஸ் உடனடியாக ரத்து செய்தார்
September 20, 2026, 8:36 pm
