நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் கூறினார்.

சமீபத்தில் MAMEE தயாரிப்பின் பேக்கேஜிங்கில் பத்துமலை முருகன் படம் இருந்தது தொடர்பாக பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இக் நிலைதில் நாடு முழுவதும் உள்ள இந்து சமூகத்திடம் முறையாக மன்னிப்பு கோரும் வகையில், MAMEE நிர்வாகத்தினருடன் மலேசியா இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசன் அதன் மத்திய மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.

MAMEE நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியர் பாங், தலைமைச் செயல்பாட்டு அதிகாரி வருண், தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி யுவான் யி ஆகியோர் அடங்கிய குழு இச்சந்திப்பில் பங்கேற்றது.

இச்சந்திப்பில் மன்னிப்புக் கடிதத்தை என்னிடம் அவர்கள் ஒப்டைத்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட தயாரிப்பைச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறும், எதிர்காலத்தில் இந்து சமூகம் சார்ந்த சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கலாச்சார, மத உணர்வுகளை முறையாகக் கருத்தில் கொள்ள மலேசியா இந்து சங்கத்துடன் கலந்தாலோசிக்குமாறும் அவர் MAMEE நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.

MAMEE நிர்வாகத்தின் இந்த அணுகுமுறையையும், இப்பிரச்சினையை பொறுப்புடன் கையாள்வதற்கான அவர்களின் விருப்பத்தையும் மலேசிய இந்து சங்கம் பாராட்டுகிறது.

இரு தரப்பினரையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்ட பினாங்கு மாநிலத் தலைவர் தர்மன் ஆனந்தனுக்கு நன்றி என்று தங்க கணேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset