செய்திகள் மலேசியா
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
கோலாலம்பூர்:
கடந்த நவம்பரில் மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று பேரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து ஒரு ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்துறை தலைவர் அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 10 அன்று போலிஸ் விசாரணைக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்ததாக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கூறினார்.
விசாரணை நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
விசாரணை எப்போது தொடங்கும்? என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
விசாரணை முடியும் வரை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் மலேசியாவிலேயே இருப்பதை உறுதி செய்யுமாறு லிம் போலிசாதை வலியுறுத்தினார்.
மேலும், விசாரணைக்கு ஆஜராவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லக்கூடும் என்ற கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் சமீபத்தில் நடந்த ஆயுதமேந்திய கும்பல் கொள்ளைச் சம்பவத்தை அவர் மேற்கோள் காட்டினார்.
அந்தச் சம்பவத்தில், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்பட்ட ஆறு வெளிநாட்டினர், அவர்கள் இல்லாத நிலையில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சந்தேக நபரை இப்போது இன்டர்போலின் உதவியுடன் வேட்டையாட வேண்டும்.
டுரியன் துங்கால் வழக்கில், சம்பந்தப்பட்ட நபர் நாட்டை விட்டு வெளியேறும் வரை போலிஸ் தேடுதல் வேட்டையைத் தொடங்கக் காத்திருக்க வேண்டாம்.
அவ்வாறு செய்வதற்கு சட்டப்பூர்வமான அடிப்படை இருந்தால், கடப்பிதழை ஒப்படைக்க உத்தரவு அல்லது பயணத் தடைக்கு விண்ணப்பிப்பது உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பயன்படுத்துமாறு போலிசாரையும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனத்தை துவாங்கு முஹ்ரிஸ் உடனடியாக ரத்து செய்தார்
September 20, 2026, 8:36 pm
