நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேசிய நூலகம், பழஞ்சுவடி காப்பகத்தில் இடம் பெற வேண்டும்: யுனேஸ்வரன்

புத்ராஜெயா:

நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேசிய நூலகம், பழஞ்சுவடி காப்பகத்தில் இடம் பெற வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் இதனை கூறினார்.

கோலாலம்பூர், கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் நித்திரை கதைகள் என்ற புத்தகத்தை வெளியீடு செய்யவுள்ளது.

அமைச்சு இணைந்து நடத்தப்படும் இப்புத்தக வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை மலை 3 மணிக்கு கோலாலம்பூர் தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ளது.

சிறுவர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட தமிழ்க் கதைகளின் தொகுப்பாக நித்திரை கதைகள் தான் எனக்கு தெரிந்து ஒருமைப்பாட்டு அமைச்சுடன் இணைந்து வெளியிடப்படுன் முதல் நூலாகும்.

மேலும் தேசிய நூலகத்தில் நடைபெறும் தமிழ் புத்தக வெளியீட்டு விழாவாகவும் அமையவுள்ளது.

இந்த புத்தகம் அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் சென்றடைய வேண்டும் என்பது தான் ஏற்பாட்டாளர்களின் முதன்மை இலக்காக உள்ளது.

அதன் அடிப்படையில் தான் அமைச்சு இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு முழு ஆதரவை வழங்குகிறது.

மேலும் புத்தக வெளியீட்டு விழாக்களை அமைச்சு இணைந்து நடத்த தமிழ் எழுத்தாளர்கள் முன்வர வேண்டும்.

இதன் மூலம் அமைச்சின் ஆதரவும் தேசிய நூலகம் போன்ற அமைச்சின் மண்டபங்களை பயன்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.

அதே வேளையில் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேசிய நூலகம், பழஞ்சுவடி காப்பகத்தில் இடம் பெற வேண்டும்.

இதன் மூலம் அப்புத்தகம் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கும் என்று துணையமைச்சர் யுனேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset