செய்திகள் மலேசியா
கோவை அருகே துப்பாக்கி முனையில் மலேசியச் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: போலிஸ் விசாரணை
கோவை:
தமிழ்நாடு, கோவையை அடுத்த கே.ஜி. சாவடி அருகே நவக்கரை, கொச்சி - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், மலேசியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாடகை வேன் மீது மர்ம நபர்கள் அரிவாள் தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி வாடகை வேனில் சென்று கொண்டிருந்த மலேசியப் பயணிகள், நேற்று மாலை 5.30 மணியளவில் வாகனத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரு மர்ம நபர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அக்வாடிகள், வேனுக்குள் நுழைந்து அரிவாளால் தாக்கியதில், மலேசியாவைச் சேர்ந்த லோகநாதன் (52) மற்றும் அவரது மகன் உகேந்திரன் (21) ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர்.
காவல்துறையில் புகார் அளித்தால் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்படும் என்பதால், பயணிகள் உடனடியாகப் புகாரளிக்காமல் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் சென்ற வாகனம் மதுக்கரை மார்க்கெட் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அதே மர்ம நபர்கள் வாகனத்தை மறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், துப்பாக்கியைக் காட்டி பயணிகளை மிரட்டியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனே திரண்டு மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், பொதுமக்கள் வருவதைக் கண்ட அக்கிரமக்காரர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 11:55 am
கூலிமில் எஸ். ஷீலா கொலை சம்பவம்: நீதிமன்றத்தில் கணவர் ஜி. விக்னேஸ்வரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
September 21, 2026, 11:09 am
ஜொகூர் பாரு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த மூவர் கைது
September 21, 2026, 11:09 am
இந்து சமூகத்திடம் MAMEE நிறுவனம் மன்னிப்பு கோரியது: தங்க கணேசன்
September 21, 2026, 11:08 am
மாதத்திற்கு மாதம் நமது ஆட்சியாளர்களை மாற்ற முடிந்தால், மன்னராட்சி முறை தோல்வியடையும்: பிரதமர்
September 21, 2026, 11:06 am
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக் தனது ராஜினாமா நடவடிக்கைகளைக் கையாளவுள்ளார்
September 21, 2026, 11:05 am
டுரியான் துங்காலில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேர் குறித்த விசாரணை ஏன் தாமதமாகிறது: லிம்
September 21, 2026, 11:04 am
மலாக்கா மாநிலத் தேர்தல் நிலைப்பாட்டை தேசிய முன்னணி தெளிவுபடுத்த வேண்டும்: அமிரூடின்
September 21, 2026, 10:51 am
நாடு முழுவதும் 17 இடங்களில் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 21, 2026, 9:27 am
