நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் அனைத்தும் எந்தவொரு பாகுபாடின்றி நடத்தப்படுகிறது 

கோலாலம்பூர்: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் அனைத்தும் எந்தவொரு பாகுபாடின்றி நடத்தப்படுவதாக அதன் தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் ஹலீம் அமான் கூறினார். 

ஒவ்வொரு விசாரணையும் எவ்வித அழுத்தமும் அல்லது பயமும் இன்றி தொழில்முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய, பயமுமின்றி பட்சபாதமுமின்றி செயல்படும் கொள்கையே அந்த முகமையின் முக்கியக் கோட்பாடாகத் தொடர்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் ஊழல் தடுப்புச் சட்ட அமலாக்க முகமையான எம்.ஏ.சி.சிஇன் நேர்மை, பிம்பம் மற்றும் கண்ணியத்தைத் தக்கவைக்க இந்த நிலைப்பாடு மிகவும் அவசியமானது என்று அவர் கூறினார்.

எம்.ஏ.சி.சி எந்தவொரு அழுத்தத்திற்கும் அல்லது பயத்திற்கும் ஆட்படாமல், ஒரு துணிச்சலான மற்றும் சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட வேண்டும்.

பிரதமர் துறையின் சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் சைதை நேற்றிரவு அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தப் பிறகு அப்துல் ஹலீம் இதனைத் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset