நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ விவாகரத்து: 18 ஆண்டுகள் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது

கோலாலம்பூர்: 

கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தனது கணவர் இராமசந்திரனை விவாகரத்து செய்தார். 

கடந்த 2008ஆம் ஆண்டு ஹன்னா இயோ அவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது. 

இந்த தகவலை ஹன்னா இயோவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. 

2018ஆம் ஆண்டு முதல் செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராக ஹன்னா இயோ பதவி வகித்து வருகிறார். 

இதற்கு முன் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினராகவும் சிலாங்கூர் மாநில முதல் பெண் சபாநாயகராகவும் நியமிகப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

இருவருக்கும் ஷே, கேலைக் இரு பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset