நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண்மூடித்தனமாக ஆம்புலன்ஸை செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய விவகாரம்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் 

ஜாசின்: 

கடந்த வாரம் கண்மூடித்தனமாக ஆம்புலன்ஸை செலுத்தி 18 வயதுடைய இளைஞரின் மரணத்திற்கான காரணமான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். 

மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் அவர் இந்த குற்றங்களை மறுத்தார். 

கம்போங் ஆயர் மெர்பாவ் சமிஞ்கை விளக்கு சந்திப்பில் இந்த சாலை விபத்து நிகழ்த்து. இதில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அமிருல் அஷ்ராஃப் எனும் இளைஞர் ஆம்புலன்ஸை மோதி விபத்தில் பலியானார். 

10 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அளிக்க வழிவகை செய்யும் 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்‌ஷன் 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் சந்தேக நபருக்கு மூவாயிரம் ரிங்கிட் பிணைத்தொகை அனுமதி வழங்கி மாஜிஸ்டிரெட் மஸானா சினின் ஜாமின் வழங்கினார். 

ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 17ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset