செய்திகள் மலேசியா
கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் தொடர்பில் அவதூறுகள்; மோசடி நடந்ததை நிரூபித்தால் அன்றே ராஜினாமா செய்கிறேன்: டான்ஸ்ரீ நடராஜா
பத்துகேவ்ஸ்:
கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் தொடர்பில் தம்மையும் ஆலய நிர்வாகத்தையும் குறிவைத்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியிடப்படுவதாக, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்துள்ளார்.
கும்பாபிஷேகத்திற்காக வசூலிக்கப்பட்ட வெ.78 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக சில தரப்பினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆலய திருப்பணிக்காக பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் செலவுகள் தொடர்பான அனைத்து விபரங்களும் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“வசூல் செய்யப்பட்ட தொகை, கும்பாபிஷேகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் செலவுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம்.
அப்படியிருக்கும்போது, மீண்டும் மீண்டும் ஏன் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
கும்பாபிஷேகம் என்பது ஆலயங்களில் வழக்கமாக நடைபெறும் ஒரு முக்கியமான சமய நிகழ்வு என்றும், பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம் என்றும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
ஆலய திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தம்முடைய புகைப்படத்துடன் சிவக்குமாரின் புகைப்படத்தையும் இணைத்து, “அப்பா–மகன் மோசடி” என்ற வகையில் அவதூறுகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
ஆலய திருப்பணிக்கான நன்கொடையாக மொத்தம் வெ.5.8 மில்லியன் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, இதில் வெ.4.8 மில்லியன் ரொக்கமாகவும், 1.75 கிலோ தங்கமாகவும் கிடைத்ததாக விளக்கமளித்தார்.
இதுவரை ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான பணிகளுக்காக சுமார் வெ.3.4 மில்லியன் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், மண்டலாபிஷேகம் நிறைவடைந்த பின்னரே திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான முழுமையான வரவு–செலவு கணக்குகள் இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர், ஆலயத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கணக்குகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, தேவையான நகல்கள் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
ஆலய நிதியில் முறைகேடு அல்லது மோசடி நடைபெற்றுள்ளதாக யாரிடமும் ஆதாரம் இருந்தால், அதனை உரிய முறையில் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
“மோசடி நடந்திருக்கிறது என்று கூறுபவர்கள், ஆதாரத்துடன் உறுதிப்படுத்தட்டும். உண்மையில் மோசடி நடைபெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால், அன்றே நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்,” என டான்ஸ்ரீ ஆர்.நடராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆலயத்தின் நிதி நிர்வாகம் மற்றும் திருப்பணிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், கணக்குகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தனிநபர்களை குறிவைத்து வெளியிடப்படும் அவதூறுகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
