நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்: மலேசியா மீண்டும் தலையேற்று நடத்துகிறது 

கோலாலம்பூர்: 

17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தை மலேசியா தலைமையேற்று நடத்தவுள்ளது. 

இந்த கூட்டத்துடன் அதனைச் சார்ந்த முக்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களையும் தலைமை ஏற்று நடத்தவுள்ளது.

வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்த சர்வதேச ஆசியான் அளவிலான சுகாதார மாநாடு அதிகாரப்பூர்வமாக நடைபெறவுள்ளது.

இந்த தகவலை மலேசிய சுகாதார அமைச்சு அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது 

"ஆரோக்கியமான ஆசியான்: சமத்துவமான மற்றும் எதிர்காலத்திற்கு ஆயத்தமான சுகாதார அமைப்பை நோக்கி ஒன்றிணைவோம்" என்பதே இந்த கூட்டத்தின் கருப்பொருளாகும். 

கடந்த 2004-ஆம் ஆண்டு பினாங்கில் நடைபெற்ற 7-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் மலேசியா இம்மாநாட்டை நடத்துவது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset