செய்திகள் மலேசியா
24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்திற்கு எதிராக மறியல் செய்யப்போவதாக மிரட்டிய பொதுச்செயலாளருக்கு எம்டியூசி தலைவர் கண்டனம்
கோலாலம்பூர்:
பெர்கேசோவின் 24/7 பாதுகாப்புத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டிய அதன் பொதுச் செயலாளர் கமரூல் பஹரின் மன்சரை, மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியூசி) தலைவர் அப்துல் ஹலிம் மன்சர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பேசுவதற்கும் போராடுவதற்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு உள்ள உரிமையை மதிப்பதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் மறியல் செய்யும் திட்டத்தை ஏற்கவில்லை.
இத்திட்டம் தொடர்பான தொழிலாளர்களின் கவலைகளை வெளிப்படுத்த, பெர்கேசோ, அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஊழியர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் 24/7 லிண்டுங் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற கருத்தையும் அவர் மறுத்தார்.
பணி நேரத்திற்கு வெளியே நிகழும் விபத்துகளுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விவாதங்கள் புதியவை அல்ல. அவை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
மேலும் இதில் ஊழியர் பிரதிநிதிகள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
2018-ஆம் ஆண்டிலேயே, காப்பீட்டுப் பாதுகாப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் 13 இடங்களில் 1,400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அமைப்புகளில் எம்டியூசியும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 12:27 pm
17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்: மலேசியா மீண்டும் தலையேற்று நடத்துகிறது
September 2, 2026, 12:09 pm
தபோங் ஹாஜி தொடர்பான வழக்கு விசாரணை: முன்னாள் அமைச்சர் நீதிமன்றம் வந்தடைந்தார்
September 2, 2026, 11:51 am
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மரண எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியது
September 2, 2026, 10:49 am
சரவாக் மாநிலத்தில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது: சுற்றுச்சூழல் துறை தகவல்
September 2, 2026, 9:02 am
தேசிய முன்னணியைத் தாண்டி, கொள்கை ரீதியான ஒத்துழைப்பை நம்பிக்கைக் கூட்டணி ஆராய வேண்டும்: யுனேஸ்வரன்
September 2, 2026, 8:59 am
பினாங்கில் ஃபெர்ரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் படுகாயம்
September 1, 2026, 11:00 pm
புகைமூட்டம் காரணமாக கூச்சிங் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து
September 1, 2026, 10:58 pm
