நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியைத் தாண்டி, கொள்கை ரீதியான ஒத்துழைப்பை நம்பிக்கைக் கூட்டணி ஆராய வேண்டும்: யுனேஸ்வரன்

கோலாலம்பூர்:

அம்னோ, தேசியக் கூட்டணியுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தினால் நம்பிக்கை கூட்டணி தேசிய முன்னணியை தாண்டிப் பார்க்க வேண்டும்.

சீர்திருத்தம், ஜனநாயகம், நல்லாட்சி, தேசிய நலன்கள் ஆகிய கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் பிற அரசியல் கட்சிகளுக்கு இடமளிப்பதில் பக்காத்தான் ஹரப்பான் கவனம் செலுத்த வேண்டும்.

கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ்  இதனை கூறினார்.

குறுகிய அடையாள அரசியலுடன் பிணைக்கப்படாத ஒத்துழைப்பை நம்பிக்கை கூட்டணி தீவிரமாக ஆராய்ந்து, செயல்திறன் அடிப்படையிலான அரசியலை நோக்கி நகர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது என்பது பிஎச் கொள்கைகளைக் கைவிடுவது என்று அர்த்தமல்ல.

மாறாக, சீர்திருத்தம், நிலைத்தன்மை, முன்னேற்றத்திற்கு உறுதியளித்த கட்சிகளின் பரந்த கூட்டணியை உருவாக்குவதன் மூலம் அது அந்தக் கொள்கைகளை வலுப்படுத்த முடியும்.

அம்னோ, தேசிய கூட்டணியுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்தால், பிஎச் புதிய அரசியல் கூட்டாளிகளைக் கண்டறிவதன் மூலம் ‘பெரிய கூடார’ கருத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அமானா பொதுச் செயலாளர் ஃபைஸ் ஃபட்சில் கூறிய கருத்துக்கு யுனேஸ்வரன் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset