நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாளத்தில் நிகழ்ந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: டத்தோ சிவசுப்பிரமணியம்

பத்து அராங்:

நேப்பாளத்தில் நிகழ்ந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப
அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ சிவசுப்பிரமணியம் இதனை கூறினார்.


நேப்பாள வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பத்து ஆராங் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில மஇகா முன்னாள் தலைவர் எம்பி ராஜா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

மேலும் மலேசியாவில் இருந்து நேப்பாளம் சென்ற 50க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட அவர்கள் நலமுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் இப்பிரார்த்தனை நடைபெற்றது.

அதே வேளையில் காணாமல் போன மலேசியர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்.

இதற்கு பிரதமர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில் அரசாங்கம் குறிப்பாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இதுவே எங்களின் கோரிக்கை என்று டத்தோ சிவசுப்பிரமணியம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset