செய்திகள் மலேசியா
பினாங்கில் ஃபெர்ரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் படுகாயம்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கில் ஃபெர்ரி ஒன்று மற்றொரு ஃபெர்ரியுடன் மோதியதில், அதில் பயணித்த ஆறு பயணிகள் படுகாயம் அடைந்ததாக பினாங்கு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 92 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃபெர்ரி முனையத்தில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மற்ற பயணிகள் சம்பவ இடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என்று அத்துறை கூறியது.
கடந்த 2023 ஆகஸ்ட்டில் இந்த கேடமரன் ஃபெர்ரி சேவை இயங்கத் தொடங்கியதிலிருந்து, இதுவே முதன் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விபத்தாகும்.
முன்னதாக, தீவில் உள்ள ராஜா துன் ஊடா ஃபெர்ரி முனையத்திலிருந்து பட்டர்வெர்த் ஃபெர்ரி முனையத்திற்குப் படகு சென்றுகொண்டிருந்தபோது இந்த மோதல் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 12:27 pm
17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்: மலேசியா மீண்டும் தலையேற்று நடத்துகிறது
September 2, 2026, 12:09 pm
தபோங் ஹாஜி தொடர்பான வழக்கு விசாரணை: முன்னாள் அமைச்சர் நீதிமன்றம் வந்தடைந்தார்
September 2, 2026, 11:51 am
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மரண எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியது
September 2, 2026, 10:49 am
சரவாக் மாநிலத்தில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது: சுற்றுச்சூழல் துறை தகவல்
September 2, 2026, 9:02 am
தேசிய முன்னணியைத் தாண்டி, கொள்கை ரீதியான ஒத்துழைப்பை நம்பிக்கைக் கூட்டணி ஆராய வேண்டும்: யுனேஸ்வரன்
September 1, 2026, 11:00 pm
புகைமூட்டம் காரணமாக கூச்சிங் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து
September 1, 2026, 10:58 pm
