நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திர தினத்தன்று ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்ட நபருக்கு போலிஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்

புத்ராஜெயா:

டத்தாரான் புத்ராஜயாவில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, ​​பல பார்வையாளர்களைத் தள்ளியும், அவர்கள் மீது மோதியும் தாக்கியதாக நம்பப்படும் ஒரு நபர் சம்பந்தப்பட்ட ஆத்திரமூட்டும் சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.

புத்ராஜயா போலிஸ் தலைவர் ஐதி ஷாம் முகமது இதனை கூறினார்.

நேற்றும் இன்றும் தனது துறைக்கு நான்கு புகார்கள் வந்ததையடுத்தும், இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு காணொளியை முகநூலில் கண்டறிந்ததையடுத்தும் இந்த விசாரணை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்தக் காணொளியில், ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறச் சட்டை அணிந்த ஒரு நபர், வாயில் திறப்பதற்காகக் காத்திருந்த பொதுமக்களை ஆத்திரமூட்டி, அவர்கள் மீது மோதித் தள்ளியதாக நம்பப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset