நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜி தொடர்பான வழக்கு விசாரணை: முன்னாள் அமைச்சர் நீதிமன்றம் வந்தடைந்தார் 

புத்ராஜெயா: 

தபோங் ஹாஜி வாரியத்தை உட்படுத்திய அரச விசாரணை ஆணையத்தின் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் 

60 வயது மதிக்கத்தக்க அந்த நபர் காலை 10.25 மணிக்கு எம்.ஏ.சி.சி சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற உடையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். 

நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில், தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  தலைமையகத்தில் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

சவூதி அரேபியாவில் தபோங் ஹாஜி நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒரு ஹோட்டல் குத்தகை விவகாரம் குறித்த விசாரணைகள் தொடர்பாக இது நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கடந்த 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை தபோங் ஹாஜி வாரியத்தில் நிர்வாக முறைகேடு நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset