நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம் காரணமாக கூச்சிங் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து

கூச்சிங்:

சரவாக்கின் பல பகுதிகளில் மோசமடைந்து வரும் புகைமூட்டச் சூழல் காரணமாகப் பார்வைத்தெளிவு பாதிக்கப்பட்டதால், கூச்சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இருப்பினும், விமான நிலையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை.

ஏர்போர்னியோ ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் குச்சிங்-முகா மற்றும் கூச்சிங்-தஞ்சோங் மனிஸ் விமானங்கள் பாதிக்கப்பட்டதாக விமான நிலையத்தின் மூத்த மேலாளர் ஜுன் இஸ்கந்தர் முர்ஷிடி தெரிவித்தார்.

மாலை 4.25 மணி நிலவரப்படி, இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஓடுபாதை 07,  ஓடுபாதை 25-இல் பார்வைத்தெளிவு 2,000 மீட்டராக இருந்தது.

இது விமான நிலையத்தின் குறைந்தபட்ச பார்வைத்தெளிவுத் தேவையான 800 மீட்டரை விட மிகவும் அதிகம் என்று ஜூன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset