செய்திகள் இந்தியா
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
புதுடெல்லி:
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடியை அவமதித்த போராட்டக்காரர்களுக்கு ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை உரையாற்றினார். அப்போது, மேடிசன் ஸ்கொயர் கார்டனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தும் கிழித்தும் அவமதித்தனர் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், நாட்டை அவமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆர்எஸ்எஸ், பாஜக அல்லது அரசை விமர்சிக்க முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், நமது நாட்டை அவமதிக்கக் கூடாது.
இதை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். தேசியக் கொடியையும், நாட்டையும் அவமதிக்காதீர்கள். மீறினால் அதற்காக நீங்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஈடுபடாததோடு வெள்ளையர்களுக்கு ஆதரவளித்து காட்டிக் கொடுத்து வந்தனர் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
