செய்திகள் இந்தியா
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
புதுடெல்லி:
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இதுவரை 4 விமானங்களில் 68.5 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.
கடந்த 26-ஆம் தேதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
அன்றைய தினமே இந்திய விமானப் படையின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்துக்கு 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. கடந்த 27-ஆம் தேதி இந்திய விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 37.5 டன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த 28-ஆம் தேதி சி-130ஜே விமானம் மூலம் 10 டன் நிவாரணப் பொருட்கள் நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 29-ம் தேதி இந்திய விமானப் படையின் சரக்கு விமானம் மூலம் மேலும் 11 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 4 விமானங்களில் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அந்த நாட்டுக்கு இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
இதில் போர்வைகள், தார்பாலின் கூடாரங்கள், தூங்குவதற்கான சிறப்பு படுக்கைகள் ஆகியவையும் அடங்கும்.
மேலும் நேபாளம் முழுவதும் பெருவெள்ளத்தால் 40-க்கும் மேற்பட்ட பிரதான பாலங்கள் சேதமடைந்துள்ளன.
அங்கு தற்காலிக பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாள அரசு கோரி உள்ளது.
முதல்கட்டமாக தற்காலிக இரும்பு பாலங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
