செய்திகள் இந்தியா
பாஜக ஆளும் உ.பி.யில் லஞ்சப் பணத்தை நேர்மையாக பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த மாநகராட்சி கவுன்சிலர்கள்: வைரலாகும் காணொலி
லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து, உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
லஞ்சமாக கிடைக்கும் பணத்தை தங்களுக்குள் நேர்மையாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், ஒருவர் தண்ணீர் பாட்டிலில் உள்ள கங்கை நீரை அங்குள்ள மற்ற நபர்களின் கைகளில் ஊற்றுகிறார். அதன் பிறகு அவர் “மாநகராட்சிக்கு கிடைக்கும் லஞ்சப் பணம் 60 கவுன்சிலர்களுக்கும் சமமாகப் பகிரப்படும். குழுவில் உள்ள யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், அனைவரும் ஒற்றுமையாக அவருக்கு ஆதரவாக நிற்போம்” என சத்தியம் செய்கிறார்.
அதைத் தொடர்ந்து மற்ற அனைவரும் அதே வாக்கியங்களை மீண்டும் கூறி சத்தியம் செய்கின்றனர். மேலும், அந்த வீடியோவில் சத்தியத்தை மீறிய ஒருவரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ கவுன்சிலர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கிளப்பியுள்ளது.
யோகி ஆதித்ய நாத் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
