செய்திகள் இந்தியா
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி:
அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க இந்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதிகரித்து வரும் சா்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், எதிா்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக ஒன்றிய உணவுத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதிக அளவில் சா்க்கரையை இருப்பு வைத்துப் பயன்படுத்தும் நிறுவனங்கள் முக்கியமாக ஒரு மாதத்தில் 10 டன்னுக்கு மேல் சா்க்கரை பயன்படுத்தும் நிறுவனங்கள், தங்களுக்கான 15 நாள் தேவையை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும்.
குளிா்பான தயாரிப்பு நிறுவனங்கள், இனிப்பு வகைகள், கேக் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் நவம்பா் 30 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.
சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை ஓராண்டில் 13 சதவீதம் அளவுக்கு உயா்ந்து ஒரு கிலோ ரூ.52.30 என்ற அளவில் உச்சத்தில் உள்ளது. கரும்பாலை சா்க்கரை மொத்த விலையும் நடப்பு பருவத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
