செய்திகள் இந்தியா
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
ரியாத்:
சவுதி அரேபியாவின் புனித மக்கா நகரில் தொழுகை விரிப்புகளை வழங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கிய பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பயத்தில் அலறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையாகவும், சர்ச்சைகளுக்கு பெயர் போனவருமான ராக்கி சாவந்த் (47), கடந்த சில காலங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை தழுவி, தனது பெயரை ஃபாத்திமா என்று மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகருக்கு உம்ரா பயணம் மேற்கொண்ட அவர், அங்கு நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், குழந்தைகள், முதியவர்கள், விலங்குகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டதாக கூறினார்.

தொடர்ந்து, அங்கு வந்திருந்த யாத்ரீகர்களுக்கு தொழுகை விரிப்புகளை இலவசமாக வழங்கும் பணியிலும் அவர் ஈடுபட்டார். அப்போது தொழுகை விரிப்புகளை பெறுவதற்காக ஏராளமான மக்கள் திடீரென ராக்கி சாவந்தை ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு சூழ்ந்தனர்.
இதனால் கடுமையான கூட்ட நெரிசல் சிக்கிக்கொண்டார். இதில் நிலைதடுமாறி பயந்துபோன ராக்கி சாவந்த், ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்டபடி கூட்டத்தை அமைதிப்படுத்த கடுமையாக முயற்சி செய்தார்.
இருப்பினும் கூட்டம் அவரை விடாமல் துரத்திச் சென்று, அருகில் இருந்த கடைக்குள்ளும் புகுந்து எஞ்சிய விரிப்புகளை பிடுங்கிச் சென்றது.
இந்த தள்ளுமுள்ளுவின் போது சில நபர்கள் அவரது ஹிஜாபை பிடித்து இழுத்ததால் அவர் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்துக்கும் ஆளானார். இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
