செய்திகள் இந்தியா
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
மும்பை:
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக, மும்பை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் வணிக ரீதியான ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழியை ஓரளவிற்காவது பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அம் மாநில அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகி இருந்தது. இது, ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் எளிதாக்குவதுமே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் அறிவிக்க்பபட்டது.
இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்துத் துறை நேற்று மாநிலம் முழுவதும் ஒரு சிறப்பு ஆய்வு நடவடிக்கையைத் தொடங்கியது. இதில், 16 கேள்விகள் அந்த ஓட்டுநர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை குழுக்கள் மும்பை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனைகளை நடத்தி, 3,995 ஓட்டுநர்களை ஆய்வு செய்தன.
மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர். இவர்களில், 604 ஓட்டுநர்களுக்கு அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான மராத்தி மொழித் திறன் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
மும்பை பெருநகரப் பகுதியைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 4,222 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர்; அவர்களில் 664 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சேர்த்து முதல் கட்டமாக, மராத்தி மொழி குறித்த போதிய அறிவு இல்லாத மொத்தம் 1,268 ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ், மகாராஷ்டிர போக்குவரத்து துறை அலுவலகங்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
