நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 தேசிய தினக் கொண்டாட்டம் வெற்றி: பிரதமர், துணைப்பிரதமர் பாராட்டு 

புத்ராஜெயா: 

நாட்டுப் பற்றை விதைக்கும் வகையில் இவ்வாண்டுக்கான 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் புத்ராஜெயா சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. 

69ஆவது தேசிய தின கொண்டாட்டம் வெற்றிப் பெற்றதை அடுத்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி இருவரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 

தேசிய தின கொண்டாட்டம் மிகவும் நேர்த்தியான முறையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் நிகழ்ச்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மனமார்ந்த வாழ்த்துகள் என அவர்கள் தெரிவித்தனர். 

கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டம் மக்களின் அமோக ஆதரவினை பெற்று சிறந்த தருணமாக அமைந்ததாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார். 

முன்னதாக, இன்று காலை புத்ராஜெயா சதுக்கத்தில் 69ஆவது தேசிய தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset