செய்திகள் மலேசியா
இனவெறி, அடக்குமுறையை நிராகரிப்போம்; ஊழலிலிருந்து விடுபடுவோம்: பிரதமர்
புத்ராஜெயா:
இனவெறி, ஊழல், அடக்குமுறை மற்றும் மக்கள் நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றை நிராகரிப்பது உட்பட, சமூகம் ஒரு உண்மையான சுதந்திரமான ஆன்மாவைக் கட்டமைக்கும்போது நாட்டின் சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகிறது.
இன்று அடையப்பட்ட சுதந்திரம், ஒரு இறையாண்மை, நீதி, அமைதியான நாட்டை உருவாக்குவதற்காக பல்வேறு இனங்கள், மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து போராடியதன் விளைவாகப் பிறந்தது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
முகநூல் தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு பதிவின் மூலம், தாய்நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருந்த மக்களின் உறுதியின் விளைவாக சுதந்திர விடியல் உதயமான 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியின் வரலாற்றுத் தருணத்தை டத்தோஸ்ரீ அன்வார் நினைவு கூர்ந்தார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர், சுதந்திரம் எளிதில் பெறப்படுவதில்லை என்று முதல் பிரதமரான மறைந்த துங்கு அப்துல் ரஹ்மான் தெரிவித்த செய்தியையும் மீண்டும் வலியுறுத்தினார்.
சுதந்திரம் என்பது எளிதில் பெறக்கூடிய ஒன்றல்ல, மாறாக அதை அடைவதற்குத் தேவைப்படுவது ஒரு மாபெரும் தியாகமே என்று மறைந்த துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆக சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் முந்தைய தலைவர்களின் ஆணையை தற்போதைய தலைமுறை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும்.
மலேசியாவின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக, வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மலேசியர்கள் ஒன்றுபட்டு, ஒருமித்த கருத்தை வலுப்படுத்தி, தங்களின் முழு ஆற்றலையும் முயற்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2026, 11:17 am
2026 தேசிய தினக் கொண்டாட்டம் வெற்றி: பிரதமர், துணைப்பிரதமர் பாராட்டு
August 31, 2026, 10:56 am
மலேசிய மரத்தோனில் ஹோனரின் மனித ரோபோ 10 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தது
August 31, 2026, 10:02 am
69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
August 31, 2026, 9:45 am
69ஆவது தேசிய தின கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்
August 30, 2026, 10:32 pm
