நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் நாட்டு மக்களுக்கு வாழ்த்து 

புத்ராஜெயா: 

மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா இருவரும் நாட்டின் 69ஆவது தேசிய தின வாழ்த்துகளை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து கொண்டனர். 

காலை மணி 8 மணிக்கு பேரரசர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா இருவரும் புத்ராஜெயா சதுக்கத்தை வந்தடைந்தனர். 

அவர்களின் வருகையை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தொடர்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இருவரும் வரவேற்றனர். 

இவ்வாண்டுக்கான தேசிய தின கொண்டாட்டம் மலேசியா மடானி, அனைவருக்குமான நல்வாழ்வு என கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. 

புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset